Wednesday, December 26, 2012

விளையாட்டால் வந்த வினை: ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த சிறுமி பரிதாப சாவு
விளையாட்டால் வந்த வினை: ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த சிறுமி பரிதாப சாவு
பாலக்காடு, டிச. 26-கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ். பொறியாளரான இவர் டெல்லியில் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் கேரளாவுக்கு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். குழந்தைகள் ரெயிலுக்குள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. 

பாலக்காடு அருகே இன்று ரெயில் வந்தபோது, சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜியா (7 வயது), திடீரென அவசரகால ஜன்னல் வழியாக வெளியே விழுந்து பரிதாபமாக இறந்தார். 
இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அவசர காலத்தில் வெளியேறும் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு குழந்தைகளை விளையாட விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
Current events