மனைவிக்கு "கேன்சர்' எனக்கூறி 2வது திருமணம் செய்தவர் கைது
மதுரை:மனைவிக்கு "கேன்சர்' எனக்கூறி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த, மதுரை சொக்கலிங்கநகர் சுரேஷ்,32 கைது செய்யப்பட்டார்.சுரேஷ் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவருக்கு மனைவி ராதா,30. இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடித்து விட்டு தகராறு செய்ததால், மனைவியிடம் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். கணவருக்கு 2வது திருமணம் நடந்ததாக, மதுரை தெற்கு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி ராதா புகார் செய்தார். ராதா கூறுகையில்,""என்னுடன் சண்டையிட்டு, வீட்டுக்கு வராமல் இருந்தார். அலங்காநல்லூர் சின்ன இலந்தைக்குளம் செல்வியுடன், 22, பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு "கேன்சர்' என்றும், சில மாதங்களில் இறந்து விடுவேன் எனவும் பொய் கூறி, நேற்று முன் தினம் அவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகளுடன் வருமானமின்றி கஷ்டப்படுகிறேன்,'' என்றார்.உதவி கமிஷனர் ராஜாமணி உத்தரவின்படி, சுரேஷ் கைது செய்யப்பட்டார்.Friday, January 18, 2013
மொய்ப்பணம் திருட்டு
செக்கானூரணி:கருமாத்தூர் அருகே உள்ள கேசம்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் காசிமாயனின் திருமணம் நேற்று முன்தினம் ஒரு மண்டபத்தில் நடந்தது. அன்று மாலை 4மணியளவில் பாலுவின் வீட்டுக்கு சென்ற மதுரை செல்லூரைச் சேர்ந்த குமார் மனைவி காசியம்மாள்,30, ரவிக்குமார் மனைவி ஈஸ்வரி,28, ஆகியோர் "மொய்' எழுதுவது போல் நடித்து "மொய்'பானையில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றனர். பாலு கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கற்பழிப்பு:45; பலாத்காரம்:77: தலைநகர் இன்னும் மாறவில்லை
புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பலாத்கார முயற்சி போன்றவை தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ல் மரணமடைந்தார். இதனையடுத்து தலைநகர் டில்லியில் இது வரையில் வரலாறு காணாத அளவில் வயது வித்தியாசமின்றி , அரசியல் கட்சிகளை தவிர்த்த மக்கள் போராட்டம் வெடித்தது. மக்களை சமாதானப்படுத்த வந்த டில்லி முதல்வர் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு போராட்டம் தொடர்ந்து நீடித்தது. மக்களின் புரட்சியை கண்ட மத்திய அரசு அவசர அவசரமாக கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைக்கு கொண்டு வர பரிசீலனை செய்துள்ளது. அதே போல் ஒவ்வொரு மாநில அரசும் பாலியல் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற துவங்கியது.
மேற்கண்ட மாணவியின் இறப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் தலைநகர் டில்லியில் 45 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 75 பலாத்கார வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 26 வழக்குகளை தவிர்த்து பெரும்பாலானவை குடும்ப நண்பர்கள் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. .
தலைநகர் டில்லிக்குட்பட்ட பகுதிகளான கோவிந்தபுரி 21, சங்கம் விஹார் 17, மற்றும் ஷாகர்பூர் போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் கற்பழிப்பு வழக்கு 572-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 706 ஆகவும், பலாத்கார முயற்சி வழக்கு 2011-ல் 657-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 727 ஆகவும் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் 94 சதவீத வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருதாககூறினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவும்,அவர்களுக்கு தேவையான ரோந்து வாகனம், மோட்டார்சைக்கிள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கூறினார்.
ஒரு லட்சம் மக்கள் தொகை கணக்கின் படி கடந்த 2005-ம்ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 4.42 லிருந்து 2012-ம் ஆண்டில் 4.15 ஆக குறைந்துள்ளதாக போலீஸ் புள்ளிவிவர கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளான புள்ளி விவர ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்களும், ஐந்து பாலத்கார முயற்சி சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!
வறுமைக்குப் பயந்து இன்றைய டெல்டா விவசாயிகள் தங்களைத் தாங்களே அறுவடைசெய்து கொள்கிறார்களே?
இது மிக மோசமான சமிக்ஞை!
'நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது’ என்பது பழைய கவிதை.
'சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்; அதனால்
உழன்றும் உழவே தலை’ - என்பது அதற்கும் முந்தைய குறள். உலகம் உழவையே நம்பி இயங்குகிறது, அதனால் எவ்வளவு துன்பம் வரினும் உழவே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். ஆனால் உழவை கேவலமான தொழிலாகவும் உழவனை நாட்டின் சுமையாகவும் நினைக்கும் சமூகமாக மாறிவிட்டோம். ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால் நூறு பேர் பட்டினி கிடக்கப் போகிறார்கள், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருளின் உற்பத்தி குறையப் போகிறது என்று அர்த்தம். மிக மோசமான நிலைமையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!
வறுமைக்குப் பயந்து இன்றைய டெல்டா விவசாயிகள் தங்களைத் தாங்களே அறுவடைசெய்து கொள்கிறார்களே?
இது மிக மோசமான சமிக்ஞை!
'நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது’ என்பது பழைய கவிதை.
'சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்; அதனால்
உழன்றும் உழவே தலை’ - என்பது அதற்கும் முந்தைய குறள். உலகம் உழவையே நம்பி இயங்குகிறது, அதனால் எவ்வளவு துன்பம் வரினும் உழவே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். ஆனால் உழவை கேவலமான தொழிலாகவும் உழவனை நாட்டின் சுமையாகவும் நினைக்கும் சமூகமாக மாறிவிட்டோம். ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால் நூறு பேர் பட்டினி கிடக்கப் போகிறார்கள், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருளின் உற்பத்தி குறையப் போகிறது என்று அர்த்தம். மிக மோசமான நிலைமையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!
அடகுக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி முற்றுகை
ஊமச்சிகுளம்:மதுரையில் பல கோடி ரூபாய் அடகு நகைகளுடன் மாயமான கடை உரிமையாளரை கைது செய்து, நகைகளை மீட்டுத் தரக்கோரி வாடிக்கையாளர்கள் ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.மதுரை அய்யர்பங்களா லட்சுமணன் உச்சப்பரம்பு ரோட்டில் "முத்து பைனான்ஸ்' நகை அடகுக் கடை நடத்தினார். குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதியினர் நகைகளை அடகு வைத்து பணம்
பெற்றனர்.
பொங்கலையொட்டி நகைகளை மீட்க பலர் பணம் கட்டினர். இருநாட்களுக்குப் பின் நகைகளை தருவதாக கூறினார். குறிப்பிட்ட நாளில் நகையை பெற வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தனர். கடை பூட்டிவிட்டு லட்சுமணன் மாயமானார். அடகு வைத்தவர்கள் கடையை முற்றுகையிட்டனர்.
இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கடையில் வேலை பார்த்த மூர்த்தியை அழைத்து விசாரித்து வருகிறார். கடை உரிமையாளரை கைது செய்ய பாலகிருஷ்ணன் எஸ்.பி., 4 தனிப்படை அமைத்துள்ளார்.
லட்சுமணனை கைது செய்ய கோரி, வாடிக்கையாளர்கள் ஊமச்சிகுளம் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தனர். லட்சுமணன் குறித்து தெரிவித்தால் கைது செய்வதாக போலீசார் கூறினர். இதனால், ஆத்திரமுற்ற வாடிக்கையாளர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டதுடன், மறியலில் ஈடுபட்டனர்.
ராஜ்குமார், காந்திபுரம்: புதூர் காந்திபுரத்தை சேர்ந்த 50பேர் 200 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளோம். சிலர் நகையை திருப்ப பணம் கட்டினர். பணத்தை பெற்ற லட்சுமணன் ஓடிவிட்டார்.
போஸ், வண்டியூர்: அடகு வைத்துள்ள 15 பவுன் நகையை திருப்ப ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினேன். திடீரென அடகு கடை உரிமையாளர் ஓடிவிட்டார்.
டி.எஸ்.பி., சீனிவாசபெருமாள்: நகை அடகு வைத்த ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். உரிமையாளர் லட்சுமணன் குடும்பத்தினர் மற்றும் வேலை பார்த்தவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அவரை கைது செய்தவுடன் நகைகளை மீட்டு ஒப்படைப்போம்.

மதுரை:மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடும் வறட்சியால் கால்
நடைகள் மேய்ச்சலின்றி தவிக்கின்றன. பால் இன்றி, கன்றுகள் மடிந்து வரும் பரிதாபச் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையில் பயன்பெறும் தமிழகத்திற்கு, இம்முறை ஏமாற்றமே
மிஞ்சியது. குறிப்பாக, தென்மாவட்டங்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மழையில்லாமல், விவசாய பயிர்கள் கருகின. வழக்கத்திற்கு மாறாக வெயில் கடுமையாக இருந்ததால், கண்மாய்கள் வறண்டன.
நீரின்றி காய்ந்த பயிர்களை, விவசாயிகளே கால்நடைகளுக்கு இரையாக்கினர். நடப்பாண்டு விவசாயம் பொய்த்து போன நிலையில், அதை நம்பியிருந்த கால்நடைகளுக்கும் சோகம்
ஏற்பட்டுள்ளது. நீரின்றி
மேய்ச்சல் புற்கள், சருகாய் மாறியுள்ளன.
குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தவிக்கின்றன. வெளியூரிலிருந்து வரும் மாடுகள், தங்கள் கிராமத்தில் மேய்ச்சலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தகராறுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது. மேய்ச்சல் குறைந்ததால், பசுக்களின் பால் உற்பத்தி பாதித்து, கன்றுகள் இறப்பு அதிகரித்துள்ளது.
வழக்கமாய் மேய்ச்சலுக்கு, ஒரு மைல் தூரம் பயணிக்கும் மாடுகள், தற்போது ஆறு மைல் தூரம் வரை, நடக்கின்றன.
அதிலும் மேய்ச்சலின்றி,
சோர்வடைந்து, எடை குறைந்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம்
பழையனூர், வல்லாரேந்தலில் இருந்து, மதுரை களிமங்கலம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு
வந்த மாடுகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், வேறு பகுதிக்கு நடைகட்டின.
ஊர்காவலன், 65, கூறியதாவது: விபரம் தெரிந்த நாள் முதல், கால்நடை மேய்ச்சல் தொழிலில் உள்ளேன். இப்படியொரு பஞ்சத்தை பார்த்ததில்லை. மழையின்றி, நிலங்கள் வறண்டு போயுள்ளன; குளங்களில் நீரில்லை. இரையின்றி மாடுகள் மயங்குகின்றன. வேறு ஊருக்குச் சென்றால், "எங்கள் மாடுகளுக்கு மேய்ச்சல் வேண்டும்,' என, விரட்டுகின்றனர். நேற்று ஒரு கிராமத்தில், அடித்து விரட்டினர்;தப்பி வந்தோம். எங்களின் ஏழு கன்றுகள், இதுவரை
இறந்துள்ளன. இரை இல்லாமல், மாடுகள் அனைத்தும்,
"அடிமாடு' தோற்றத்திற்கு மாறிவிட்டன, என்றார்.
மனைவி இறந்த துக்கத்தில்முதியவர் தற்கொலை
சென்னை:மனைவி இறந்த துக்கம் தாளாத முதியவர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எண்ணூர் பாரதியார் நகரில் வசித்தவர் ஆவடிசாமி, 87; இவரின் மனைவி வள்ளியம்மாள், 80. இவர்களுக்கு, நான்கு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆவடிசாமியும், வள்ளியம்மாளும் தனியே வசித்தனர்.நான்கு நாட்களுக்கு முன், வள்ளியம்மாள் திடீரென இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத ஆவடிசாமி, வீட்டு மின் விசிறியில் நேற்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து, எண்ணூர் போலீசார் விசாரிக்கின்றனர்கடல் படத்தில் முத்தக்காட்சி!

மணிரத்னம் இயக்கி வரும் படம் கடல். இதில் கார்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு அதிரடியான முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. லிப் லாக் எனப்படும் ஆங்கில முத்தக் காட்சி இது. படத்திற்கு தெலுங்கு, மற்றும் தமிழில் டிரைய்லர் வெளியிடுள்ளார் மணிரத்னம். இதில் தெலுங்கு டிரைய்லரில் இந்த முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள போட்டோக்களில் இந்த முத்தக் காட்சியை வெளியிடவில்லை. "பத்து விநாடிகள் இடம்பெறும் இந்த முத்தக்காட்சி படத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு ராதா முதலில் தயங்கினார் ஆனால் துளசி தைரியமாக நடித்ததார். ஹீரோ கவுதம் பல டேக்குகள் வாங்கி நடித்தார். 10 விநாடி முத்தக் காட்சி எடுக்க நான்கு மணி நேரம் ஆனது. துளசி ரொம்ப தயங்கியதால் முக்கியமான டெக்னீஷியன்கள் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டு படம் பிடிக்கப்பட்டது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-கும், ராதாவும் பூக்களுக்குள் ஆடையின்றி படுத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் வேண்டுமென்று கருதிய மணிரத்னம் இந்த முத்தக் காட்சியை வைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்தக் காட்சி போன்று இதுவும் பரபரப்பாக பேசப்படுமாம்
Subscribe to:
Posts (Atom)