Monday, December 17, 2012

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெளிநாட்டினர் முன்பதிவு

மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், பொங்கலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு, வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர்.
டிசம்பர் - ஜனவரி வரை தான் வெளிநாட்டு பயணிகள் மதுரைக்கு அதிகம் வருகின்றனர். இக்கால கட்டத்தில், 15 ஆயிரம் பேர் மதுரையில் தங்குகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், ஜல்லிக்கட்டு, தெப்பத் தேரோட்டம் என பல நிகழ்ச்சிகளை இங்குள்ள மக்களோடு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மதுரை வரும் வெளிநாட்டினர் திருவனந்தபுரம், கோவளம், கொச்சி கடலோரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் பங்கேற்கின்றனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுவது இல்லை. ஆனாலும் வெளிநாட்டினர் குழுக்களாக இங்கும் வந்து ரசிக்கின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்கு, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, சுற்றுலாத்துறையில் வெளிநாட்டினர் முன்பதிவு செய்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை இலவசமாகவே, அலங்காநல்லூருக்கு அழைத்து செல்கிறது. 

Granite scam: MK Alagiri's son Durai Dayanidhi surrenders before Madurai courtMADURAI: After being on the run for four months in an alleged illegal granite quarrying scam, Union Minister M K Alagiri's son Durai Dayanidhi surrendered before a court at nearby Melur today, four days after he was granted anticipatory bail by the High Court.
Accompanied by a battery of advocates and DMK workers, he paid a personal security of Rs 10,000, while two persons stood as personal surety, at the court of Judicial Magistrate Jaykumar.
The court directed him to appear daily from tomorrow until further orders before Keezhavalavur Police station near Melur, which had registerd cases against him under various IPC sections, including 120(b) (criminal conspiracy), 447 (criminal trespass) and 420 (cheating), for allegedly quarrying illegally on government land.
Dayanidhi and 14 others got bail in the multicrore granite quarrying scam, in which owners of various granite firms, including Olympus Granites in which he is a partner, had been named as accused.
The scam came to light when former Madurai Collector U Sagayam held an inquiry and submitted a report to the government, stating that illegal quarrying had cost the exchequer a loss of over Rs 16,000 crore.
Cases were registered based on complaints from Village administrative officers (VAOs) of Melur and keezhavalavu stations.
The VAOs had accused Dayanidhi and another partner Nagarajan of encroaching on land adjacent to the permitted area and causing loss of Rs 440 crore.
On December 10, the Madurai Bench of Madras High Court had quashed a non-bailable arrest warrant issued by a lower court against Dayanidhi and granted him anticipatory bail.
Police had formed a special team to look out for Dayanidhi and alerted immigration authorities to help them in preventing him and other accused from leaving the country.
Various other granite firms also have faced the heat of the Government crackdown following the findings by Sagayam.

கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு ரூ.29 லட்சம் சிறப்பு கட்டணம் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, அரசு வழங்க வேண்டிய சிறப்பு கட்டணம் 29 லட்சம் ரூபாய், 4 ஆண்டுகளாக வழங்கவில்லை.
அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.32ம், 9-10ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ. 47ம், பிளஸ்1, பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் ரூ.102, தொழிற்கல்விக்கு ரூ.92, கலை பிரிவு மாணவர்களுக்கு ரூ.72 வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை 2008ல், அரசு ரத்து செய்தது. அதற்கு பதில் பள்ளிகளுக்கு அரசே அந்த கட்டணத்தை வழங்கி வந்தது.
இதில் இருந்து, பள்ளி பராமரிப்பு, மருத்துவ முகாம்கள், சாரணர் இயக்க செயல்பாடு, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளி கல்வித் துறைக்கு உட்பட்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் இந்த கட்டணம் வழங்கப்படுகின்றன. ஆனால், கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் 2008 முதல் வழங்கப்படவில்லை. இதனால், 2008-2010 வரை ரூ. 17 லட்சத்து 92,095 நிலுவையில் உள்ளது. இதுதவிர, 2012ம் ஆண்டு வரை இதன் நிலுவை ரூ.29 லட்சத்து 18 ஆயிரத்து 705ஆக உயர்ந்துள்ளது.
இப்பள்ளிகளின் மாநில சட்ட ஆலோசகர் சின்னபாண்டியன் கூறியதாவது:பள்ளி கல்வித் துறைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டணங்களை அரசு வழங்கி வருகிறது. ஆனால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு மட்டும் 4 ஆண்டுகளாக வழங்கவில்லை. இக்கட்டணங்களை பள்ளிக் கல்வி துறையே வழங்கலாம் என, 2010 அக்.,7ல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த கட்டணங்கள் வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில், பள்ளி கல்வி துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணங்களை வழங்கும்போது, கள்ளர் பள்ளிகளுக்கும் சேர்த்து வழங்கவேண்டும், என்றார்.

பஸ் மோதி ஒருவர் பலி

மேலூர்:மதுரை மேலூர் மெயின் ரோட்டில், மர வேலை செய்தவர் கருப்பையா,63. நேற்று அவ்வழியே நடந்து சென்ற போது, பொன்னமராவதியில் இருந்து மதுரையை நோக்கி வந்த பி.ஆர்.பி., பஸ் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கல்லூரி பேராசிரியர்

திருமங்கலம்:தன்னையும், தன் பெற்றோரையும் ஏளனமாக பேசிய, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த, தனியார் கல்லூரி பேராசிரியர் போலீசில் சரணடைந்தார்.
பேராசிரியர், துறை தலைவர்
அண்ணாநகர் மேற்கு, ஆறாவது நிழற்சாலை, செந்தூர் குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்தவர் சேலம் மேட்டூரை சேர்ந்த 
கண்ணன், 41. 
இவர் திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையிலுள்ள, தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும், கல்லூரியின், வணிக நிர்வாகவியல் துறை தலைவராகவும் இருந்து வந்தார்.
இவரது மனைவி மோகனாம்பாள், 37; சேலம் கொண்டாம்பட்டியை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன், திருமணமான கண்ணன் - மோகனாம்பாள் தம்பதியினருக்கு, 13 வயதில், பூஜா என்ற மகள் உள்ளார்.
செல்வ செழிப்பால் ஏளனம்
கண்ணன் குடும்பத்தினரை விட, மோகனாம்பாள் குடும்பம், செல்வ செழிப்புள்ள குடும்பம் என்பதால், திருமணம் ஆனதில் இருந்தே, மோகனாம்பாள், கண்ணனையும் அவர் குடும்பத்தினரையும் ஏளனமாக பேசி, கண்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்து வந்த மோகனாம்பாளின் ஏளன பேச்சு, கடந்த, 15 நாட்களாக, கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கண்ணன், நேற்று முன்தினம், மனைவி மோகனாம்பாள், மகள் பூஜாவை அழைத்து கொண்டு, மெரீனா கடற்கரை, ஓட்டல், வணிக நிறுவனங்கள் என்று சுற்றி விட்டு, இரவு வீடு வந்து சேர்ந்தார்.
உரலால் தலையில்...
பிறகு, மனைவியோடு உறங்கி கொண்டிருந்த கண்ணன், அதிகாலை, 2:00 மணிக்கு எழுந்தார். அப்போது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த, மனைவி மோகனாம்பாளின் தலையில், இஞ்சி இடிக்க பயன்
படும் சிறிய கல் உரலால் தாக்கினார்.
அப்போது விழித்து கொண்ட மோகனாம்பாள், அதை எதிர்த்து போராடினார். தாக்குதல் முற்றிய நிலையில், மிகுந்த கோபமடைந்த கண்ணன், சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால், 
மோகனாம்பாளின் கழுத்தை அறுத்து கொன்றார்.
பிறகு, கண்ணன், தன் வீட்டு 
உரிமையாளரை தொடர்பு கொண்டு, போலீசிடம் தகவல் கொடுக்க 
சொன்னார். 
பின், திருமங்கலம் காவல் 
நிலையத்தில், சரண் அடைந்தார். போலீசார், கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Anaivarukkum vanakam ungala pathu matham sumanthu kastappattu pethu eduthu ovvoru nodium unglai kannukullai vachu thangi valartha ammava thayavu seithu intha padathula irukura mathiriyana nilamaiku kodupogathinga. Athuthan neenga oru makana thaiku seira parikaram. 
dear people the world death day december 21 2012 . neenga yaarum payappadathinga ungala kapatha intha spiderman varuvaru ok cool night .