அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டுமாணவர்கள் பயப்பட வேண்டாம்
மதுரை:""கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,'' என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார். கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: நல்ல வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்காத கல்வியால், எப்பயனும் இல்லை. கல்வியில் சுதந்திரமும், நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடும் இல்லாததால் தான், தரமான உயர்கல்வியைத் தரமுடிகிறது. இந்தியாவில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில், குறுகிய காலத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளோம். அதன் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளோம். நாக் கமிட்டி மூன்றாம் முறையாக ஆய்வு செய்துள்ளனர், என்றார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசியதாவது:
கல்வி ஒன்று தான், மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாமல் இருக்கும் செல்வம். அறிவியலுக்கு இரு முகங்கள் உண்டு. ஏவுகணை, தொழில்நுட்பம் மூலம் புறவசதிகளை பெருக்குவது ஒரு முகம். சிந்தனைகளை உருவாக்குவது அகநுட்ப அறிவியல், இன்னொரு முகம்.நிறைய கற்கும் போது தான் தெளிவு வரும். புதிய ஆளுமை பிறக்கும். மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்க வேண்டும். அவற்றை, பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் அனுமதிக்கிற புத்தகங்களை படிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை. படிப்பதை ஈடுபாட்டுடன் செய்தால், அறிவியலும், தொழில்நுட்பமும் கையில் வரும், என்றார்.நிர்வாக செயல் அதிகாரி ராம்குமார் முன்னிலை வகித்தார். மேரிடைம் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் துறைத் தலைவிசுப்பலட்சுமி, கல்லூரி முதல்வர் சண்முகம், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் (பொறுப்பு) ஸ்ரீராம் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment