5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை
திருத்தணி : திருத்தணி அடுத்த, குண்டலூரில் (மேல் திருத்தணி) வசிப்பவர்
நரசிம்மன். இவரதுமகள் அனிதா, 23. இவருக்கும், கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த, சீனிவாசலு, 30, என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு முன், சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.மீண்டும்
பிரசவத்திற்காக, நேற்று முன்தினம்திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மகப்பேறு மருத்துவர் வேதபிரியா, உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் மோகனன், அனிதாவை பரிசோதனை செய்தனர்.நேற்று காலை, 11:30 மணிக்கு அனிதாவுக்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ஐந்து கிலோ, நூறு கிராம்
எடை இருந்தது. இதுவரை திருத்தணி மற்றும் திருவள்ளூர் மருத்துவமனைகளில், இந்த அளவிற்கு, அதிக எடை கொண்ட குழந்தை பிறக்கவில்லை. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், டாக்டர் மோகனன் கூறுகையில், நமது நாட்டில் பிறக்கும் குழந்தையின் எடை சராசரியாக, மூன்று கிலோவில் இருந்து, மூன்றரை கிலோ வரை இருக்கும். தற்போது பிறக்கும் குழந்தைகளின் எடை, இரண்டரை கிலோ முதல் மூன்று கிலோ வரை மட்டுமே உள்ளது, என்றார்.
மேலும், தாய்க்கு சர்க்கரை வியாதி இருந்தால், குழந்தையின் எடை அதிகரிக்கும். அனிதாவுக்கு சர்க்கரை வியாதி இல்லை. ஆனால், குழந்தையின், எடை மட்டும்ஐந்து கிலோ உள்ளது வியப்பாக உள்ளது,என்றார்

No comments:
Post a Comment