ஜாமீனில் வெளியே வந்த
கொலை கைதிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
பெரம்பூர், டிச. 27-
சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் பெரியசாமி (30). இவரும் இவரது அண்ணன் சேகரும் சேர்ந்து அதே பகுதி ரவுடி பாட்டில் மணியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி கொன்றனர்.
இந்த முன் விரோதம் காரணமாக பாட்டில் மணியின் கூட்டாளிகள் பெரியசாமியையும் சேகரையும் கொல்ல சதி திட்டம் தீட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். இதில் பெரியசாமி பிராட்வே பஸ் நிலையம் எதிரே உள்ள தெருவில் மாமியார் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்தார்.
இதை நோட்டமிட்ட பாட்டில் மணியின் கூட்டாளிகள் 5 பேர் கொண்ட கும்பல் பெரியசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தலையில் பலத்த வெட்டு விருந்ததால் ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலையில் அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

No comments:
Post a Comment