Thursday, December 27, 2012


மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து ஏன் ? முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின
மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் நள்ளிரவில் தீ பிடித்து எரிந்தது. காலையில் தான் தீ விபத்து வெளியே தெரிய வந்ததால் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதனால் இந்த விபத்தில் சதிசெயல் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் மதுரையும் ஒன்றாக திகழ்கிறது. கோயில் நகரமான இங்கு சமீப காலமாக கிரானைட் முறைகேடு முக்கிய பிரச்னையாக இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. குறிப்பாக இவை அனைத்தும் வருவாய் துறை வசத்திற்குறியதால் இந்த துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தீ பிடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. 



காலையில் தான் தெரிந்தது:

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது. பல ஏக்கர் கணக்கில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மெகா பழமை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் மாடியில் நிர்வாக அலுவலர் ஏ என்ற பிரிவு அலுவலகம் செயல்பபட்டு வருகிறது. இங்கு குறிப்பாக ஊழியர்களின் சர்வீஸ் தொடர்பான விஷயங்கள் இந்த அதிகாரியின் கட்டுக்குள் இருக்கும். மேலும் நிலப்பட்டா வழங்குதல் , கான்ட்ராக்ட் பணி தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவில் ஒரு மணியளிவில் திடீர் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் இந்த தீ எரிந்த விவரம் அதிகாலை 5 மணியளவில் தான் தெரியவந்தது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. நள்ளிரவில் பிடித்த தீயை காலை வரை யாருக்கும் தகவல் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 


தீயை அணைத்தாலும் இங்கிருந்த முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் அலுவலர்கள் தொடர்பான விவரம் அழிந்து விட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய ஆவணங்களை அழிக்கும் நோக்கத்தில் யாரும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் துறை ரீதியான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேரில் சென்று தீ பிடித்த காரணம் குறித்து விசாரித்தார்.

சோகத்தில் அலுவலர்கள் ;

இங்கு அரசு அலுவலர்கள் குறிப்பாக தாசில்தார்களின் சர்வீஸ் பட்டியல் இங்கு அதிகம் இருந்ததாக தெரிகிறது. அலுவலர்ககளின் டிரான்ஸ்பர் , பதவி உயர்வு, அலுவலர்கள் மாற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் இருந்தன. இந்த ஆவணங்கள் அழிந்து இருப்பதால் தமது எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுமே என்ற சோகத்தில் அலுவலர்கள் மூழ்கியுள்ளனர்.

No comments:

Post a Comment