கனடாவில் மகர விளக்கு பூஜை

பர்ன்பை : கனடாவின் பர்ன்பை பகுதியில் உள்ள அருள்மிகு துர்க்கா தேவி ஆலயத்தில் ஜனவரி 13ம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. அன்று மாலை ஐயப்பனுக்கு நெய், தயி்ர்,விபூதி,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பக்தர்களின் பஜனைகளும் நடைபெற்றது. மாலை அணிந்த பக்தர்கள் நெய் தேங்காய் தயாரித்து இருமுடி கட்டிக் கொண்டனர். சுவாமி ஐயப்பனைத் தொடர்ந்து 18 படிகளிலும் விளக்கேற்றி படிபூஜை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்து மகரஜோதி காட்சி தரும் வேளையில் மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்களின் சரண கோஷம். காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
No comments:
Post a Comment