ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி "பீல்டிங் தேர்வு செய்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
மூன்றாவது போட்டி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி "பீல்டிங் "பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் இடம் பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு குக், பெல் இணைந்து நிதான துவக்கம் தந்தனர். பின் குக், பீட்டர்சன் தலா 17 ரன்களில் அவுட்டாகினர். பெல் 25 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
No comments:
Post a Comment