மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கல்லூரி பேராசிரியர்
திருமங்கலம்:தன்னையும், தன் பெற்றோரையும் ஏளனமாக பேசிய, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த, தனியார் கல்லூரி பேராசிரியர் போலீசில் சரணடைந்தார்.பேராசிரியர், துறை தலைவர்
அண்ணாநகர் மேற்கு, ஆறாவது நிழற்சாலை, செந்தூர் குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்தவர் சேலம் மேட்டூரை சேர்ந்த
கண்ணன், 41.
இவர் திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையிலுள்ள, தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும், கல்லூரியின், வணிக நிர்வாகவியல் துறை தலைவராகவும் இருந்து வந்தார்.
இவரது மனைவி மோகனாம்பாள், 37; சேலம் கொண்டாம்பட்டியை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன், திருமணமான கண்ணன் - மோகனாம்பாள் தம்பதியினருக்கு, 13 வயதில், பூஜா என்ற மகள் உள்ளார்.
செல்வ செழிப்பால் ஏளனம்
கண்ணன் குடும்பத்தினரை விட, மோகனாம்பாள் குடும்பம், செல்வ செழிப்புள்ள குடும்பம் என்பதால், திருமணம் ஆனதில் இருந்தே, மோகனாம்பாள், கண்ணனையும் அவர் குடும்பத்தினரையும் ஏளனமாக பேசி, கண்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்து வந்த மோகனாம்பாளின் ஏளன பேச்சு, கடந்த, 15 நாட்களாக, கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கண்ணன், நேற்று முன்தினம், மனைவி மோகனாம்பாள், மகள் பூஜாவை அழைத்து கொண்டு, மெரீனா கடற்கரை, ஓட்டல், வணிக நிறுவனங்கள் என்று சுற்றி விட்டு, இரவு வீடு வந்து சேர்ந்தார்.
உரலால் தலையில்...
பிறகு, மனைவியோடு உறங்கி கொண்டிருந்த கண்ணன், அதிகாலை, 2:00 மணிக்கு எழுந்தார். அப்போது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த, மனைவி மோகனாம்பாளின் தலையில், இஞ்சி இடிக்க பயன்
படும் சிறிய கல் உரலால் தாக்கினார்.
அப்போது விழித்து கொண்ட மோகனாம்பாள், அதை எதிர்த்து போராடினார். தாக்குதல் முற்றிய நிலையில், மிகுந்த கோபமடைந்த கண்ணன், சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால்,
மோகனாம்பாளின் கழுத்தை அறுத்து கொன்றார்.
பிறகு, கண்ணன், தன் வீட்டு
உரிமையாளரை தொடர்பு கொண்டு, போலீசிடம் தகவல் கொடுக்க
சொன்னார்.
பின், திருமங்கலம் காவல்
நிலையத்தில், சரண் அடைந்தார். போலீசார், கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment