Monday, December 17, 2012

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெளிநாட்டினர் முன்பதிவு

மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், பொங்கலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு, வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர்.
டிசம்பர் - ஜனவரி வரை தான் வெளிநாட்டு பயணிகள் மதுரைக்கு அதிகம் வருகின்றனர். இக்கால கட்டத்தில், 15 ஆயிரம் பேர் மதுரையில் தங்குகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், ஜல்லிக்கட்டு, தெப்பத் தேரோட்டம் என பல நிகழ்ச்சிகளை இங்குள்ள மக்களோடு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மதுரை வரும் வெளிநாட்டினர் திருவனந்தபுரம், கோவளம், கொச்சி கடலோரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் பங்கேற்கின்றனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுவது இல்லை. ஆனாலும் வெளிநாட்டினர் குழுக்களாக இங்கும் வந்து ரசிக்கின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்கு, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, சுற்றுலாத்துறையில் வெளிநாட்டினர் முன்பதிவு செய்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை இலவசமாகவே, அலங்காநல்லூருக்கு அழைத்து செல்கிறது. 

No comments:

Post a Comment