50வது நாளை கொண்டாடியது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
சினிமாவில் வெற்றி விழா கொண்டாடி ஷீல்டு கொடுப்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. காரணம் எந்தப் படமும் 100 நாள் வரை ஓடுவதில்லை. சில படங்களை வேண்டுமென்றே 100 நாள் ஓட்டுவார்கள். இதனால் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் வெளியூர்களில் தியேட்டரில் காணோம். என்றாலும் சென்னையில் திரையிட்ட தியேட்டர்கள் அனைத்திலும் 50 நாட்கள் ஓடிவிட்டது. இதையே ஒரு விழா எடுத்து கொண்டாடிவிட்டார்கள்.இயக்குனர் கே.வி.ஆனந்த் அனைவருக்கும் ஷீல்டு கொடுத்தார். பார்த்திபன், சிவஸ்ரீ சீனிவாசன், யுடிவி தனஞ்செயன், கேயார், யூகி சேது, விமல், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி என்னாச்சு... என்ற புகழ்பெற்ற வசனத்தை பேசினர். ஹீரோயின் காயத்திரி படத்தில் வந்தது போல் இல்லாமல் நல்ல மேக்அப்புடன் அழகாக வந்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் நடிகைகளுக்கு ஷீல்டு கொடுக்கும் படம் போட்டோகிராபர்களுக்கு கிடைத்தது.
No comments:
Post a Comment